நகர் மன்ற கூட்டத்தில் விளக்குடன் பங்கேற்ற உறுப்பினா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், 19-ஆவது வார்டு உறுப்பினர் வெ. ரவிச்சந்திரன் மயானத்தில் மின்விளக்கு எரியாததைக் கண்டித்து ராந்தல் விளக்குடன் பங்கேற்றுப் பேசினார். புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமடைந்த பழைய பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும், குப்பைகளை அள்ளும் பணி சரிவர நடைபெறவில்லை போன்ற கோரிக்கைகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் உறுதியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி