ஊழியரான இவர் கடந்த 21ஆம் தேதி இரவு 10 மணியளவில் சின்னசேலத்தில் இருந்து பெத்தானூர் நோக்கி தனது கணவருடன் பைக்கில் சென்றார். ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பைக் வேகதடையின் மீது ஏறி விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து சாந்தி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.