இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வரின் பழிவாங்கும் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 4 பேராசிரியர்களை (எச்ஒடி) துறை தலைவர்களை அப்பொருப்பிலிருந்து நீக்கியதை கண்டித்தும் அரசு மருத்துவர்களை முதல்வர் பழிவாங்கும் போக்கை கைவிட கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்கள் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் ஆர். செந்தில்குமார் அன்பழகன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.