திருவண்ணாமலை மகா தீபம்: சிறப்பு மருத்துவ முகாம்கள் தயார்

திருவண்ணாமலையில் டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு நடைபெறும் மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 90 இடங்களில் மருத்துவ முகாம்கள், 60 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் என மொத்தம் 14 கி.மீ. கிரிவலப் பாதையில் 37, தற்காலிக பேருந்து நிலையத்தில் 23, வெளிவட்ட சாலையில் 8, அணுகு சாலையில் 22 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர். 'க்யூஆா்' குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், கைப்பேசியில் மருத்துவ முகாம்களின் இருப்பிடங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி