காட்பாடி யார்டில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில், திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் உள்பட 6 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை - திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி (66033), காட்பாடி - திருப்பதிக்கு இரவு 9.10 மணி (67210), திருப்பதி - காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு (67209) இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, திருவண்ணாமலை - தாம்பரத்துக்கு ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.