க.குறிச்சி: வேன் தீப்பற்றி எரிந்து விபத்து (VIDEO)

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45; இவர், நேற்று காலை விவசாய நிலத்தில் இருந்து மினி வேனில் (டாடா ஏஸ்) வைக்கோல் ஏற்றிக் கொண்டு பங்களா தெரு வழியாக வேனை ஓட்டிச் சென்றார். அப்போது, உயர் அழுத்த மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட டிரைவர் ஏழுமலை வேனை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி உயிர் தப்பினார். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி