இதுகுறித்து, கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நீலமங்கலத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த மூவரும், நீலமங்கலம் புதுகாலனி சண்முகம் மகன் சிலம்பரசன், 25;,25; அய்யனார் மகன் திருவேங்கடம், 23;,23; நீலமங்கலம் வடக்கு தெரு ஆறுமுகம் மகன் விஷ்ணு, 22; என தெரிந்தது. இதில் பணம் திருடுபோன குடோனில் கடந்த சில ஆண்டுகளாக, திருவேங்கடம் வேலை பார்த்ததும், சிலம்பரசனின் பைக்கிற்கு லோன் கட்ட, 3 பேரும் சேர்ந்து, குடோனில் பணத்தை திருடியது கண்டறியப்பட்டது. அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 900 ரூபாய் மற்றும் மொபைலை பறிமுதல் செய்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு