மணலூர்பேட்டை: வாகனம் மோதி டெய்லர் பலி

மணலுார்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 42; டைலர். இவர், நேற்று முன்தினம் திருக்கோவிலுார் - மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்குப் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

பிள்ளையார்பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்றபோது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், 38; ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் இறந்தார். புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி