சென்னையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணியம் நகர் பகுதியில் ஒருவர் சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டதை கண்டனர். அவரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தும் அவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால், போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.