வந்தவாசி தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட மழையூர், கடம்பை ஆகிய கிராமங்களில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை ஆரணி எம்பி எம். எஸ். தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.