வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு, செவ்வாய்க்கிழமை அன்று விவசாய நில கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.