வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் ஏ. ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளா் ஏ. ஜி. சபரீசன் ஆகியோா் திமுக ஆட்சியைக் கண்டித்து பேசினா். மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.