திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா (56), அவரது மனைவி சுலோச்சனா (55) சென்னையில் கட்டிட வேலை செய்து வந்தனர். சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதை அறிந்த ராஜா கண்டித்தார். போரூர் சுங்கச்சாவடி அருகே வேதநாயகத்துடன் பைக்கில் வந்த மனைவியைப் பார்த்து ஆத்திரமடைந்த ராஜா, சுத்தியலால் தலையில் அடித்ததில் சுலோச்சனாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த வேதநாயகமும் அவரது நண்பர்களும் ராஜாவைத் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.