பெரியகரம் கிராமத்தில் தைப்பூச திருவிழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம் கிராமத்தில் அமைந்துள்ள திருமால் முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக விரதம் இருந்து குருசாமி கிரேன் மூலம் உடலில் அலகு குத்திப் பறந்து வந்து முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்தார். திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி