டாஸ்மாக் கடை அகற்றக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா மண்டகொளத்தூர் கிராமத்தில், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரி, பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி மற்றும் கண்டன பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கோவில் மற்றும் பேருந்து நிலையம் அருகே இயங்கும் இந்த டாஸ்மாக் கடையை பள்ளி திறப்பதற்கு முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி