ஆக்சீலியம் பள்ளியில் பள்ளி பேருந்துகள் சேவை தொடக்க விழா.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆக்ஸிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி பேருந்துகள் சேவை தொடக்க விழா நடைபெற்றது. ஃபைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன மேலாளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் அருவி குழும இயக்குநர் அருட்சகோதரி இசபெல்லா, உறுப்பினர் ஜோதி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பள்ளிக்கு பேருந்தை நன்கொடையாக வழங்கிய ஃபைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு தாளாளர் நன்றி தெரிவித்தார். சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் தங்கள் நிறுவனம் சேவையாற்றி வருவதாக சிவராமகிருஷ்ணன் கூறினார். அலங்கரிக்கப்பட்ட புதிய பள்ளி பேருந்துகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி