திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய சிறுவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். திருட்டு குறித்து புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.