மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர்–செங்கம் சாலையில் உள்ள பானாம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானக் கடையால் பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். கடையை உடனடியாக அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி