திருவண்ணாமலை மாவட்டம் போளூா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில், 25 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த பழைய மரத்தேருக்குப் பதிலாக புதிய தோ் செய்வதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்க, உடைந்த நிலையில் உள்ள பழைய தேரை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினா் வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோ் வலம் வரும் மாட வீதிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.