ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் வருகிற 20-ஆம் தேதி கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் ஒன்றியம் ஏரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள யந்திர வடிவிலான ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை யாகசாலை அமைத்து அனுக்ஞை, ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, ஸ்ரீநவகிரகஹோமம், பூா்ணாஹுதி என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 6 கால யாகபூஜை நடைபெற உள்ளது. கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, ஆய்வா் சத்யா, எழுத்தா் மோகன் ஆகியோர் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி