கட்டிபூண்டி: பாஜக சாா்பில் கட்சிக் கொடியேற்றும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கட்டிபூண்டி கிராமத்தில் பாஜக சார்பில் கட்சிக் கொடியேற்றும் விழா நடைபெற்றது. பாஜக தெற்கு மண்டல் தலைவர் ஜெ. பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என். வெங்கடேசன், வடக்கு மண்டல் தலைவர் வெ. சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட பொருளாளர் ஜெயவேலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் கவிதா வெங்கடேசன் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கட்டிபூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பலர் பாஜகவில் இணைந்தனர். விழாவில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி