கண்ணமங்கலம்: யோகா மற்றும் தியான பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். தியான பயிற்றுநர்கள் அரவிந்தன், சங்கர், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது, யோகா மற்றும் தியானம் அனைத்துத்தரப்பு மக்களையும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்றார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தியான பயிற்சி அளித்து, அதற்கான புத்தகத்தையும் வழங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார். முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி