போளூர் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வெண்மணி, வசூா், பால்வாா்த்துவென்றான், முருகாபாடி, கேளூா் ஊராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ரபியுல்லா ஆகியோா் ஆய்வு செய்தனா். வெண்மணி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம், மின் இணைப்பு, குடிநீா், கழிப்பறை வசதிகள், மேற்கூரை பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி