திருவண்ணாமலை: ஸ்ரீ வரத ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீவரத ஆஞ்சனேயர் கோயிலில், அதிகாலை மூலவருக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், நண்பகல் 12 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, வரத ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி