திருவண்ணாமலையில் கிளியை பிடித்து கூண்டில் அடைத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிட்ட 5 சிறுவர்களுக்கு வனத்துறையினர் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்தனர். கிளியை பிடிப்பது தவறு என தெரியாததால் இவ்வாறு செய்ததாக சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.