தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளின் சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம் என பல்வேறு வரி இனங்களை பிப்ரவரி மாதம் இறுதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை பேரூராட்சிகளின் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதனால், வரிபாக்கி உள்ள பேரூராட்சிகளில் வரிவசூலை விரைந்து முடிக்கவேண்டும் என வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதன் பேரில், போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் குடியிருப்போா், பேரூராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் உரிம கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை பிப். 28-க்குள் செலுத்த வேண்டும் என செயல் அலுவலா் பா. கோமதி தெரிவித்துள்ளாா்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்