கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் விபரம் வருமாறு:திருவண்ணாமலை மாவட்டத்தில், பிஎம் கிசான் நிதி உதவி பெற தகுதியான விவசாயிகளுக்கு, விரைவில் கிடைக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகள் பலருக்கு கடந்த சில மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலா சர்க்கரை ஆலை மற்றும் போளூர் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை பெற்று வழங்க வேண்டும். துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய விதைநெல் முளைப்புத்திறன் குறைவாக உள்ளது.
போதுமான மகசூல் கிடைக்கவில்லை. எனவே, தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இடைத்தரகர்களின் தலையீடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், உயர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயி ஒருவர் வேப்பிலை மாலை அணிந்தபடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.