மேலும் விழாவில் நாள்தோறும் இரவு அனுமந்த வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தவிர வருகிற 20ம்தேதி மாலை 6மணிக்குமேல் சுவாமி திருக்கல்யாண உற்வசமும், அன்று இரவு 11மணிக்குமேல் கருடசேவையும், 22ம்தேதி விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 9மணிக்கு மேல் திருத்தேர் உற்சவமும், 24ம் தேதி காலை 11மணிக்கு தீர்த்தவாரியும் அன்று இரவு கொடியிறக்கமும் சிறப்பாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது