சேத்துப்பட்டில் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில் விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் மாவட்ட வருவாய்த் துறை சார்பில், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். கலைக் குழுவினா் பேருந்து நிலையம், நான்குமுனை சந்திப்பு, முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினா். இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் கலால் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி