திருவண்ணாமலை: தோட்டக்கலை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மங்கநல்லூர் கிராமத்தில் தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கலை ஆதிபராசக்தி தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற தோட்டக்கலை அனுபவ பயிற்சி பெற வந்தவாசியில் முகாமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், உழவர் செயலியின் முக்கியத்துவம், தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள், மண் மாதிரி சோதனை, நீர் மாதிரி சோதனை உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் கமேஷ், கவியரசு, கனிஷ்கா, கிஷோர், கவின், கவியரசன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர். மேலும், தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விவசாயிகளிடம் மாணவர்கள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி