சேத்துப்பட்டி: நடத்துனரின் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.18,800 மோசடி

சேத்துப்பட்டியில் அரசு போக்குவரத்து கழக நடத்துனரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ. 18,800 மோசடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ஆம் தேதி இளங்கோவன் என்பவர் பணம் எடுக்க சென்றபோது, அருகில் நின்ற மர்மநபர் உதவி செய்வது போல நடித்து கார்டை மாற்றியுள்ளார். பின்னர் அந்த கார்டை பயன்படுத்தி மூன்று தவணைகளாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி