அண்ணாவின் நினைவு தின சமபந்தி விருந்து மற்றும் நல உதவிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சமபந்தி விருந்து மற்றும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு. தி. சரவணன் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோயில் சார்பாக உணவுக்கூடத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. மேலும், பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய சேலைகளை ஏழை எளியோருக்கு எம்எல்ஏ பெ. சு. தி. சரவணன் மற்றும் மாவட்ட இணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் வழங்கினர். அறங்காவலர் குழுத் தலைவர் விஜயா சேகர், செயல் அலுவலர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி