திருவண்ணாமலையில் இன்று (டிச. 3) நடைபெறும் திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் 12 அடி நீளமுள்ள புகழ்பெற்ற ‘மரக்கா மாலை’ உள்ளிட்ட பல்வேறு மாலைகள் திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாலைகளை வணங்கிச் சென்றனர்.