திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான என். டி. ஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி. ஏழுமலை, 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தன்னம்பிக்கையுடன் சவால் விடுத்துள்ளார். பிரச்சாரத்தின் போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், பொதுமக்களிடமும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், தொகுதி முழுவதும் வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க உறுதி அளித்தார்.