வந்தவாசி மேற்கு ஒன்றிய விசிக செயற்குழுக் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வந்தவாசி மேற்கு ஒன்றிய விசிக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் இரா. பிரபு தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பாக பணியாற்றும் விதம் குறித்து கட்சியினருக்கு சிறப்பு அழைப்பாளா்கள் விளக்கிப் பேசினா். மேலும், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள் ஏ. எம். மகேஷ், சி. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி