வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் பாஞ்சரை மற்றும் திரக்கோயில் கிராமங்களில் ரோந்து சென்றபோது, சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற பெருமாள் (61) மற்றும் துரை (54) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து மொத்தம் 19 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.