இந்திரவனம் கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நலமுடன் வாழவும், வறுமை நீங்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் வனபோஜன விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. கிராம மக்கள் பத்மாவதி சீனிவாச பெருமாள் கோயில் அருகே கூடி, குடும்பத்துடன் பொங்கல் கூடையுடன் குளக்கரைக்குச் சென்று அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு, குடும்பத்துடன் உணவு அருந்தினர். மாலையில் பூங்கரகம் ஜோடித்து அம்மன் அருள் பெற்று கிராமம் திரும்பினர். இந்த விழா நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.