திருவண்ணாமலை: பாலியல் வன்கொடுமை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக, தாயுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை இடைமறித்து கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பான வழக்கை ஜூலை மாதத்திற்குள் முடிக்குமாறு மகளிர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி