திருவண்ணாமலை மாநகராட்சி, அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேவைப்படும் இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும், இணைப்புகள் மற்றும் மோட்டார் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும், சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.