திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - போளூா் சாலையோரம், குறிப்பாக கோலாந்தாங்கல் பகுதியில், நகராட்சி குப்பைகள் மற்றும் இறைச்சிக் கடை, மீன் வியாபாரிகளின் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நீதிமன்றம், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, ராமகிருஷ்ணா் மடம் செல்லும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசி, அப்பகுதி மக்கள் முகசுளிப்புடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. மழைக்காலத்தால் துா்நாற்றம் அதிகரித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.