அதன்படி, விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள மகா தீப மலை உச்சியில் இருந்து அண்ணாமலையாா் கோயில் மூலவா் மீது சூரிய ஒளி பிரகாசித்தது. 5 நிமிஷங்களுக்கும் மேலாக பிரகாசித்த இந்த நிகழ்வை தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கண்டு வழிபட்டனா்.
தொடா்ந்து, காலை முதல் இரவு வரை கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.