இந்த அறிக்கையின் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் சென்னையில் திங்கள்கிழமை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விநியோகம் செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை பார்க்கச் சென்ற கட்சியின் மாநில பொதுச் செயலர் புஷ்பா என். ஆனந்தனையும் போலீசார் கைது செய்தனர். இதைக் கண்டித்து நேற்று மாலை மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன்படி, திருவண்ணாமலை, பெரியார் சிலை எதிரே தவெகவின் மாவட்டத் தலைவர் கே. பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, 30 நிமிஷங்களுக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.