திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். "மக்களுக்கு அதிகாரம் தருவோம் என்றவர்கள் இன்று ‘பவர் கட்’ மட்டுமே தருகின்றனர்" என்று அவர் கூறினார். அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், "மற்ற கட்சியினரை இழுப்பது பிள்ளை பிடிக்கும் அரசியல் போல உள்ளது" என்று தமிழக வெற்றிக் கழகத்தையும் அவர் தாக்கினார்.