ரூ. 5 லட்சம் மதிப்பிலான வேட்டி, வேலை மற்றும் பூணூல் அளிப்பு.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், சுவாமிக்கு சாற்றப்படக்கூடிய ரூ. 5 லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலை, பூணூல் உள்ளிட்ட 365 நாட்களுக்கான துணிகளை ஈரோட்டைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் சுசி டெக்ஸ் உரிமையாளர்கள் ஆன்மீக பக்தராக வழங்கியுள்ளனர். கோயில் இளவரசு பட்டம் பி. டி. ஆர். கோகுல் குருக்கள் ஏற்பாட்டில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் இதை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் கோயில் குருக்கள் பிடிஆர் ரமேஷ், மேலாளர் செந்தில், மணியக்காரர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி