போளூர்: சிங்கப் பெண்ணே எழுந்து வா தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயணம்

போளூா் களம்பூா் பேரூராட்சியில் நடைபெற்ற ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயணத்தில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி பேசுகையில், தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். டாஸ்மாக் வருவாய் ஆண்டுக்கு ரூ. 3,250 கோடி கிடைத்தும், வளா்ச்சித் திட்டங்கள் இல்லாதது குறித்தும், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திமுக அரசின் திட்டங்கள் குறித்தும் அவா் குற்றம் சாட்டினாா்.

தொடர்புடைய செய்தி