திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழுத் தலைவர் T. வேல்முருகன் தலைமையில் இன்று (11/06/2025) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வின்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந்து அதன் பின் கூடுதல் அவசர சிகிச்சை மையக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழு ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சட்டப்பேரவை செயலாளர் முனைவர். கி. சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள், எம்.கே. மோகன், சா. மாங்குடி, இரா. அருள், அரசுத்துறை உயர் அதிகாரிகள், தலைமை மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி