ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுரேஷ்குமார் (28) என்பவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த நடவடிக்கை குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.