மண்பாண்டத் தொழிலாளா்கள் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம்.

திருவண்ணாமலையில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் விலையில்லா பொருட்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை ஒட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி