திருவண்ணாமலை: புதுமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்

திருவண்ணாமலை தலையாம்பள்ளம் என்ற பகுதியைச் சேர்ந்த மணிமாறன், அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமாவை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பூர்ணிமா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவர்கள் கடலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், அவர்கள் திருமணத்தை பதிவு துறையிலும் பதிவு செய்துள்ளனர்.

 இந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்து, புதுமண தம்பதிகள் திருவண்ணாமலை போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது போலீசாரிடம் மணிமாறன் புகார் ஒன்றை தந்துள்ளார். இந்நிலையில், போலீசார் மணமகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இளைஞர், காதல் திருமணம் செய்து கொண்டு, போலீசில் தஞ்சம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி