தி.மலை: அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அணி சார்பில் நடைபெற்ற அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி